உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை அக்.,31க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை அக்.,31க்குள் விண்ணப்பிக்கலாம்

கரூர்: தமிழறிஞர்கள் உதவித்தொகைக்கு வரும், 31க்குள் விண்ணப்பிக்-கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இவர்களுக்கு, 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்-கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு) இணைக்க வேண்டும். விண்ணப்பப்படிவத்தை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திலேயே நேரடியாக பெற்று கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ www.tamilvalarchithurai.tn.gov.inகட்டணமில்-லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும், 31க்குள் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை