மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவன் பலி
கரூர், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஜீவா நகரை சேர்ந்த சக்திவேல் மகன் கவுசிக் குமார்,17. இவர், பசுபதிபாளையத்தில் உள்ள, தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார்.நேற்று தான்தோன்றிமலையில் உள்ள, இறைச்சி கடையில் தற்காலிக வேலைக்கு சென்ற கவுசிக் குமார், கோழியை சுத்தம் செய்ய, மெஷினை இயக்க சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்த, கவுசிக்குமார், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.