உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரி்ல் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

கரூரி்ல் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

கரூர் :பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.அதில், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தகுதியான ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கை, 311ன் படி, சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாவட்ட துணைத்தலைவர் மெக்னோலியோ, சங்கரேஸ்வரி, செயலர் நாகராஜ், துணை செயலர் குணசேகரன், பொருளாளர் நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை