மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷன்களில் போலீசார் தீவிர சோதனை
11-Jan-2025
கரூர்: குடியரசு தினவிழாவை முன்னிட்டு, கரூர் ரயில்வே ஸ்டேஷனில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்-றனர்.நாடு முழுவதும் இன்று, குடியரசு தின விழா சிறப்பாக கொண்-டாடப்படுகிறது. அதையொட்டி, துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., மகேஸ்வரன் மற்றும் போலீசார், ரோந்து பணியில் தீவிரமாக ஈடு-பட்டுள்ளனர். ரயிலில் வெளியூர் செல்ல வரும் பயணிகளின் உட-மைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 'சிசி-டிவி' கேமரா மூலம் பயணிகள் கண்காணிக்கப்பட்டனர். இது தவிர ரயில்களிலும் போலீசார் சோதனையை மேற்கொண்டனர். இன்று நள்ளிரவு வரை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தொடரும் என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.மேலும், கரூர் அருகே பசுபதிபாளையம் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள, ரயில்வே பாலத்தில் போலீசார், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு சோதனையிலும் ஈடுபட்-டனர்.
11-Jan-2025