உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செல்வ வினாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

செல்வ வினாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

குளித்தலை: குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., ஓந்தாம்பட்டி கிராமத்தில் செல்வ வினாயகர், மதுரகாளியம்மன் கோவில் புனரமைக்கப்-பட்டு, கும்பாபிஷேகம் செய்வது என கிராம முக்கியஸ்தர்கள், பொது மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, கடந்த, 18ல் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். பின், யாகசாலையில் வைத்து விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம், முதற் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை செய்யப்பட்டு, சிவாச்சாரி-யார்கள் புனித நீர் அடங்கிய கும்பத்தை எடுத்து வந்து, மேளதா-ளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்தனர். பின், கோபுர கலசத்-திற்கு வேத மந்திரங்கள் முழங்க, கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். இனுங்கூர் பஞ்., துணைத்தலைவர் செந்தில், தொழிலதிபர் டெக்ஸ் முருகானந்தம் மற்றும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விழாக்-குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல் குளித்தலை, சபாபதி நாடார் தெருவில் உள்ள சக்தி வினாயகர், பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை, 7:00 மணியளவில் சிவாச்சாரியார்கள் கோபுர கல-சத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ