உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்ட பா.ஜ., தலைவராக செந்தில்நாதன் மீண்டும் தேர்வு

கரூர் மாவட்ட பா.ஜ., தலைவராக செந்தில்நாதன் மீண்டும் தேர்வு

கரூர்: கரூர் மாவட்ட, பா.ஜ., தலைவராக செந்தில்நாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.தமிழகம் முழுவதும், பா.ஜ., அமைப்பு தேர்தல் நடந்து வருகி-றது. முதல் கட்டமாக கட்சி ரீதியாக, 33 மாவட்டங்களுக்கு, மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். கரூர் மாவட்ட பா.ஜ., புதிய தலைவரை தேர்வு செய்ய கடந்த, 22ல், கட்சி அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில், 20க்கும் மேற்பட்டவர்களில் ஒருவரை, கரூர் மாவட்ட பா.ஜ., தலைவராக தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்தனர்.இறுதியாக, நேற்று முன்தினம் கரூர் மாவட்ட பா.ஜ., அலுவல-கத்தில், மாவட்ட தலைவர் பதவிக்கு மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா, தற்போதைய மாவட்ட தலைவர் செந்தில் நாதன், மாவட்ட செயலாளர் பிரபு ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.இந்நிலையில் நேற்று மாலை, 4:00 மணிக்கு கரூர்-கோவை சாலை தனியார் திருமண மண்டபத்தில், கரூர் மாவட்ட பா.ஜ., புதிய தலைவர் பதவியேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்-பட்டிருந்தது. அப்போது, புதிய தலைவராக செந்தில்நாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக, மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் அறிவித்தார்.இதையடுத்து, மாவட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம், தேர்தல் பொறுப்பாளர் சேதுராமன் உள்ளிட்டோர், பா.ஜ., தலைவர் செந்தில் நாதனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அ.தி.மு.க.,வில் இருந்து பா.ஜ.,வில் இணைந்த செந்தில் நாத-னுக்கு கடந்த, 2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு, மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை