உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எள் அறுவடை பணி மழையால் பாதிப்பு

எள் அறுவடை பணி மழையால் பாதிப்பு

கிருஷ்ணராயபுரம், மழையால், எள் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, கொசூர், சிவாயம், தேசிய மங்களம், பாப்பகாப்பட்டி, சரவணபுரம், வரகூர், மேட்டுப்பட்டி, குழந்தைப்பட்டி, அந்தரப்பட்டி, லட்சுமணம்பட்டி, வீரியபாளையம், சேங்கல் ஆகிய பகுதிகளில் பரவலாக மானாவாரி நிலங்களில் விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர். காய்கள் முற்றி விளைச்சல் கண்டுள்ள நிலையில், தற்போது பருவ மழை பல இடங்களில் பெய்து வருகிறது.மழையால் எள் செடிகளை அறுவடை செய்யும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவடை செய்து உலர்த்தப்பட்டவை அனைத்தும் மழையில் நனைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில், 300 ஏக்கர் பரப்பளவில் எள் சாகுபடி நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ