கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வடிகால் அடைப்பால் கழிவுநீர் தேக்கம்
கரூர், கலெக்டர் அலுவலகத்தில் சாக்கடை வடிகால் கால்வாய் அடைப்பு காரணமாக கழிவு நீர் தேங்கியுள்ளது.கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட கருவூலம், கனிமவளத்துறை, புள்ளியியல் துறை, மாவட்ட முதன்மை கல்வி, தொடக்கக் கல்வி, சுகாதார துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.இங்கு, திங்கள் கிழமை நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனுக்கள் கொடுக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகம். இங்குள்ள கழிப்பறை சரியாக பராமரிப்பு இல்லாததால், அதிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால், அதை பயன்படுத்தாமல் பாதியில் திரும்பி விடுகின்றனர்.இந்நிலையில், கலெக்டர் அலுவலக மைய கட்டடத்தின் பின்புறத்தில் சாக்கடை வடிகால் கால்வாய் செல்கிறது.இது முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழை பெய்து விட்டால் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுத்து வடிகால்களை துார் வாரி, சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.