உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூலி ஆட்கள் பற்றாக்குறை: இயந்திரம் மூலம் வயல்களில் களை எடுக்கும் பணி

கூலி ஆட்கள் பற்றாக்குறை: இயந்திரம் மூலம் வயல்களில் களை எடுக்கும் பணி

கூலி ஆட்கள் பற்றாக்குறை: இயந்திரம்மூலம் வயல்களில் களை எடுக்கும் பணிகரூர், அக். 19-விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில், நெல் வயல்களில் இயந்திரம் மூலம் களை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.கரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியை விட, சம்பா பருவத்தில் நெல் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணை மற்றும் அமராவதி அணைகளின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளதால், கரூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடி பணி தொடங்கியுள்ளது.கடந்த மாதம், அவுரி செடி பயிரிடப்பட்ட நிலங்களில், அதை தழை சத்தாக மாற்றி, மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் உழவு செய்து நெல் பயிரிடப்பட்டது. ஆனால், களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு, போதிய கூலி ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது.இதனால், 100 நாள் வேலை திட்டத்தை கிராம பஞ்சாயத்துக்களில், தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என, கரூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால், நவீன இயந்திரம் மூலம் நேரடியாக, நெல் வயல்களில் களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.கரூர் அருகே, சுக்காலியூர் பகுதியை சேர்ந்த விவசாய பொறியாளர் சிவக்குமார், 54, கூறியதாவது:பொதுவாக கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, சிறுமணி சம்பா, சீரக சம்பா, கருடன் சம்பா நெல் ரகங்கள் பயிரிட்டுள்ள வயல்களில், மூன்று முறை களை எடுக்க வேண்டும். ஆனால், விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.இதனால், நவீன இயந்திரம் மூலம், களை எடுக்கும் பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். அதற்கு, குறைவான ஆட்களே போது மானது.இவ்வாறுதெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை