உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிலம்பம் போட்டி: கரூர் மாணவர்கள் வெற்றி

சிலம்பம் போட்டி: கரூர் மாணவர்கள் வெற்றி

கரூர், நவ. 21-மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், கரூர் மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர்.தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கலைக்கழகம் சார்பில், திருச்சியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தன. தமிழகத்தில் இருந்து, 250 க்கும் மேற்பட்ட, மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இறுதி சுற்றில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 15 மாணவ, மாணவியர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, வஞ்சி மாநகர சிலம்பாட்ட கலை பயிற்சி பட்டறை தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட, நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி