உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் முழக்க போராட்டம்

உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் முழக்க போராட்டம்

கரூர்: உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கை விளக்க முழக்க போராட்டம், மாவட்ட துணைத்தலைவர் வையாபுரி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் நடந்தது.செம்மொழி தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில், தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. திருக்குறள் கூட்டமைப்பு நிர்வாகிகள் செங்குட்டுவன், ஈஸ்வர மூர்த்தி, எழில் வாணன், திருமூர்த்தி, மணிமாறன், அன்பு, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை