உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிந்தலவாடியில் பாலம் பணிகளில் மந்தம்

சிந்தலவாடியில் பாலம் பணிகளில் மந்தம்

கிருஷ்ணராயபுரம், சிந்தலவாடி செல்லும் சிறிய பாலத்தின் பணிகள், மந்தமாக நடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து பகுதியில் இருந்து, கரூர் - திருச்சி பழைய நெடுஞ்சாலை பிரிவு சாலை முதல், சிந்தலவாடி மாரியம்மன் கோவில் இணைப்பு வரை தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை பிரிவில் புதிய சாக்கடை கால்வாய் பாலம் கட்டப்படுகிறது. இதற்காக சாலை பறிக்கப்பட்டு, இருபுறமும் சிமென்ட் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் மட்டும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் மேற்புற பகுதி மூடாமல் பணிகள் கிடப்பில் இருப்பதால் மக்கள் அவதி தொடர்கிறது. எனவே, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ