| ADDED : மார் 11, 2024 01:51 AM
கரூர்:குளித்தலை அருகே ரேஷன் அரிசி கடத்திய, 2 பேரை கைது செய்த போலீசார், 1,260 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.கரூர்
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்
செந்தில்குமார் தலைமையில் போலீசார், குளித்தலை ரயில்வேகேட் முதல்,
அய்யர்மலை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக
வந்த, 'அசோக் லைலேண்ட தோஸ்த்' சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை
செய்தனர். அதில், 35 கிலோ எடை கொண்ட, 36 மூட்டைகளில், 1,260 கிலோ ரேஷன்
அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், ரேஷன் அரிசி
கடத்திய, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ், 22, லோகேஸ்வரன், 29,
ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு
பயன்படுத்திய வாகனத்தையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.