உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி பூங்காக்களில் சோலார் வெளிச்சம் டல்

அரவக்குறிச்சி பூங்காக்களில் சோலார் வெளிச்சம் டல்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், பொன் நகர், பாவா நகர், ஜீவா நகர் பகுதிகளில், 3 பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மாலை நேரங்களில் பொதுமக்கள் மன உளைச்சல், உடல் சோர்வை போக்க, தங்கள் குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். பூங்காக்களில் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.ஆனால், அதில் போதுமான வெளிச்சம் இல்லை என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், தற்போது மழை காரணமாக விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, பூங்காக்களில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை