உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தந்தை அறிவுரை கூறியதால் விஷம் குடித்து மகன் சாவு

தந்தை அறிவுரை கூறியதால் விஷம் குடித்து மகன் சாவு

குளித்தலை,: குளித்தலை அடுத்த கே.பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தங்க-முத்து, 60; கூலித்தொழிலாளி. இவரது மகன் சிவா, 33. குடிப்-பழக்கத்துக்கு அடிமையாகினார். கடந்த, 20 இரவு, 11:00 மணிக்கு, சிவா குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தங்கமுத்து, 'ஏன் இப்படி குடித்துவிட்டு வருகிறாய்' என கேட்டு அறிவுரை கூறியுள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட மகன் சிவா, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கினார். உயி-ருக்கு போராடிய அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவம-னையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு சிவா உயிரிழந்தார். இதுகுறித்து, லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ