மேலும் செய்திகள்
மகள் மாயம்; தாய் புகார்
21-May-2026
குளித்தலை, குளித்தலை அடுத்த நெய்தலுாரை சேர்ந்த பானுமதி, 47, என்பவரின் மகன் கோபிநாத், 29. இவரது மனைவி உஷா பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தார். கோபிநாத் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் பஸ் ஏறி சென்ற கோபிநாத், வெகு நெரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களை தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகனை காணவில்லை என தாய் கொடுத்த புகாரின்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
21-May-2026