சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
குளித்தலை, குளித்தலை அடுத்த, முள்ளிபாடி பஞ்.. செட்டியபட்டியில் பாலவிடுதி கால்நடை மருந்தகம் சார்பாக, சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.மண்டல இணை இயக்குனர் சாந்தி, உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி ஆகியோர் மேற்பார்வையில் முகாம் நடந்தது. காணியாளம்பட்டி மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். கால்நடை மருத்துவர்கள் செந்தில், மலைராஜ், கோமதீஸ்வரி ஆகியோர் சிகிச்சை வழங்கினர்.இதில், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குதல், ஆண்மை நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை செய்தனர். மேலும் தாது உப்பு கலவை வழங்கியதோடு, கால்நடைகள் குறித்து சிறு கண்காட்சி அமைக்கப்பட்டு கால்நடை வளர்க்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கறவை மாடுகள் பராமரிப்புக்கான, கால்நடை உழவர் கடன் அட்டை பெறுவதற்காக விவசாயிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.கால்நடைத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்பட கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.