உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உழவரைத்தேடி வேளாண்மை நலத்துறை திட்ட சிறப்பு முகாம்

உழவரைத்தேடி வேளாண்மை நலத்துறை திட்ட சிறப்பு முகாம்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் வேளாண்மைத்துறை சார்பில், உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் மூலம் பிள்ள பாளையம் கிராமத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் பிள்ளபாளையம் பஞ்சாயத்து கிராம விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பயிர் காப்பீடு திட்டம், நெல் சாகுபடி, மானாவாரி உளுந்து சாகுபடி, பூச்சி தாக்குதல் இன்றி பயிர்கள் பாதுகாப்பு மற்றும் இதர திட்டம் பற்றி அந்தந்த வேளாண்மைத்துறை அலுவலர்கள் விவசாயிகளிடம் எடுத்து கூறினர். கிருஷ்ணராயபுரம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் அரவிந்தன், அட்மா திட்ட உதவி மேலாளர் முரளி கிருஷ்ணன் மற்றும் உதவி அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி