உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நடக்கும் ஓட்டுச்சாவடி மையங்களில், கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்திற்குட்பட்ட, 4 சட்டசபை தொகுதிகளி-லுள்ள, 1,055 ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் நடந்தது. அதில், தான்தோன்-றிமலை அரசு கலைக்கல்லுாரி, அரசு மேல்நிலைப்பள்ளி, மண்-மங்கலம் வட்டம் சுக்காலியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கொ.சீத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்பட பல்-வேறு இடங்களில் வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகி-றதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டி-யலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6-ம், பெயர் நீக்கம் செய்வ-தற்கு படிவம்-7-, குடியிருப்பை மாற்றுவதற்கும், நடப்பு வாக்-காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் படிவம்-8-யை பயன்படுத்த வேண்டும். மேலும், Voters.eci.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் பதிவினை உறுதிசெய்ய, 1950 என்ற கட்டணமில்லா தொலை-பேசி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை