மேலும் செய்திகள்
இன்று கிராம சபை சிறப்பு கூட்டம்
01-Aug-2025
கரூர் :குப்பம் பகுதியில், சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.க.பரமத்தி அருகில், குப்பம் பஞ்சாயத்தில் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் தொடர்பாக, சமூக தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சக்திவேல், வட்டார வள அலுவலர் திலீப்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.
01-Aug-2025