தொட்டியப்பட்டியில் மருத்துவ சிறப்பு முகாம்
கிருஷ்ணராயபுரம், ஜன. 3-தொட்டியப்பட்டி கிராமத்தில், சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தொட்டியப்பட்டி கிராமத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் காய்ச்சல் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் அளவு கண்டறிதல், பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் ஆகியவை குறித்து மக்களுக்கு ஆலோசனை வழங்கப் பட்டது. டாக்டர் பார்த்திபன் மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினார். செவிலியர்கள், பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.