உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையம் திறப்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையம் திறப்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குசிறப்பு பயிற்சி மையம் திறப்புகரூர், டிச. 11-தாந்தோணி வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையம் திறக்கப்பட்டது.கரூர், காந்திகிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தான்தோன்றிமலை வட்டார வள மையத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மணவாடி ஆசிரியை உமா, குழந்தைகளுக்கு எவர்சில்வர் டிபன் பாக்ஸ் வழங்கி சிறப்பித்தார். பள்ளி அமைய உதவியவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி, பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், பயிற்சி மைய ஆசிரியர், உதவியாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !