உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கரூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கரூர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண கோவில், காளியம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் தீபாவளி பண்டிகையையொட்டி,காலை முதலே சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலையில் எழுந்த மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்களது இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டதை காண முடிந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமியை வழிபட்டனர்.* கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், நேற்று காலை சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வண்ணங்களில் அம்மனுக்கு, 108 புடவை கொண்டு சிறப்பு அங்காரம் செய்து வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை