உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

குளித்தலை, குளித்தலை அடுத்த கூடலுார் பஞ்., பேரூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ், 100 நாள் வேலை வாய்ப்பு அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் அமைக்கப்பட்டுள்ள, ஒவ்வொரு அரசு துறையிலும் பெறப்பட்டுள்ள மனுக்கள் எண்ணிக்கை குறித்தும், பொது சுகாதாரத்துறை மூலம் அமைக்கப்பட்ட முகாமில் புதிய நோயாளிகள் உள்ளனரா எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதா எனவும் கலெக்டர் கேட்டறிந்தார்.குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, தாசில்தார் இந்துமதி, தோகைமலை ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சுகந்திசசிகுமார், பஞ்., முன்னாள் தலைவர்கள் கூடலுார் அடைக்கலம், பில்லுார் ராகவன், தோகைமலை ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜேந்திரன். பாலசுப்பிரமணியன், மற்றும் அரசு துறை அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை