உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

குளித்தலையில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கரூர், குளித்தலையில் நாளை (23ல்), நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது.இது குறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் சனிக்கிழமை தோறும் நடக்கிறது. இதன்படி வரும், 23ல், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடக்கிறது. இதில், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இதய நல மருத்துவம், நரம்பியல் சிறப்பு மருத்துவம், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவம் உள்பட, 17 வகையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. முகாமில் அனைத்து சிகிச்சைகளும் பரிசோதனைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி