உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நங்கவரம் டவுன் பஞ்சாயத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

நங்கவரம் டவுன் பஞ்சாயத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

குளித்தலை :குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., சமுதாய கூடத்தில், நேற்று காலை, 10:00 மணிக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்து. செயல் அலுவலர் காந்தரூபன் தலைமை வகித்தார். டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், செந்தில்வேலவன், லதாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள், தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் பதிவு செய்து, ஒப்புகை சீட்டை பெற்றுக்கொண்டனர்.இதேபோல், நகராட்சி சார்பில் அண்ணா திருமண மண்டபத்தில் நடந்த முகாமிற்கு, நகராட்சி கமிஷனர் நந்தகுமார் தலைமை வகித்தார். தலைவர் சகுந்தலா, முகாமை தொடக்கி வைத்து, மனுக்களை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை