உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சூறைக்காற்றுடன் மழை: வீடுகளின் மேற்கூரை சேதம்

சூறைக்காற்றுடன் மழை: வீடுகளின் மேற்கூரை சேதம்

கரூர், கரூர் அருகே, மட்டபாறைப்புதுாரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வீடுகளின் மேற்கூரை சேதமாகின.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில், கரூர் மாவட்டம், கருப்பம்பாளையம் பஞ்.,க்குட்பட்ட சுக்காலியூர் அருகில் மட்டபாறைப்புதுாரில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று மதியம், 2:30 மணிக்கு மழையுடன் சூறைக்காற்று வீசியதால், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட் ஆகியவை உடைந்து சேதமாகின. கால்நடைகளுக்கு அமைக்கப்பட்டிருந்த கொட்டகை அடியோடு சாய்ந்து விழுந்தது. வீட்டின் முன் நிழலுக்கு அமைத்த தகர ஷீட்டுகள் முழுவதும் உடைந்து விட்டன. இதுகுறித்து தகவலறிந்த, கரூர் தாசில்தார் மோகன்ராஜ், சேதமடைந்த பகுதியை பார்வையிட்டு, தேவைப்படும் உதவிகளை செய்ய ஏற்பாடு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை