உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி மறியல் போராட்டம்

மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி மறியல் போராட்டம்

குளித்தலை: மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி, பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடவூர் ஒன்றியம், மாவத்துார் பஞ்., தாசிரெட்டியபட்டியை சேர்ந்தவர் ராமசாமி மகள் தரணியா, 19. இவர் கரூரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 23ம் தேதி இரவு, குடும்பத்-துடன் இரவு உணவு சாப்பிட்டு விட்டு, வீட்டில் துாங்க சென்-றனர். மறுநாள் அதிகாலை 5:30 மணியளவில் தரணியாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.பின்னர் பாலவிடுதி காவல் நிலையத்தில் தந்தை ராமசாமி புகார் அளித்தார். அதில், கடவூர் இடையபட்டி பகுதியில் உள்ள கவுண்-டம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி மகன் கோகுல கண்ணன், 21, என்பவர் மீது சந்தேகமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். போலீசாரும் மாணவியை தேடி வந்தனர். புகார் அளிக்கப்பட்டு நான்கு நாட்களாகியும், மகள் கிடைக்கவில்லையே என்று ஆவே-சமடைந்த ராமசாமி மற்றும் அவரது உறவினர்கள், நேற்று பாலவி-டுதி காவல் நிலையம் முன், வையம்பட்டி -- தரகம்பட்டி மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜா சேர்வை, பாலவிடுதி எஸ்.எஸ்.ஐ.,க்கள் சந்திரஜித், வீரராகவன் ஆகியோர் பேச்சு-வார்த்தை நடத்தினர். அப்போது மாயமான தரணியாவை, விரைவில் மீட்டு கொண்டு வருகிேறாம் என உறுதியளித்ததனர். இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை