மேலும் செய்திகள்
அரசு கலைக்கல்லுாரியில் 2 வது நாளாக கலந்தாய்வு
04-Jun-2025
கரூர்,கரூர் அரசு கலைக்கல்லுாரியில், நான்காம் நாளாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று நடந்தது.கரூர் தான்தோன்றிமலையில் உள்ள, அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2025-26) கலந்தாய்வு கடந்த, 2ல் தொடங்கியது. அதில், சிறப்பு பிரிவுகளான என்.சி.சி., முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்தது. நேற்று, பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.சி., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. மாணவ, மாணவியருக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து, கலந்தாய்வு நடக்கிறது. வரும், 30ல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க உள்ளது.
04-Jun-2025