உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிறம் மாறி வரும் நிலத்தடி நீர் கமிஷனரிடம் மனு வழங்கல்

நிறம் மாறி வரும் நிலத்தடி நீர் கமிஷனரிடம் மனு வழங்கல்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, தெற்கு தெரு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே, நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்தில் வருவதால், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக, நகராட்சி கமிஷனரிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.பள்ளப்பட்டி, தெற்கு தெரு பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இப்பகுதியை சுற்றி, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் பள்ளி, கல்லுாரி, மசூதி உள்ளிட்டவை அமைந்துள்ளன. இப்பகுதியில், மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையில் இருந்து, அதிக துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்தில் வருவதால் அதை குடிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் கூறினர்.இப்பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது, குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறி, 50க்கும் மேற்பட்டோர் மஞ்சள் நிறத்தில் வரும் நிலத்தடி நீரை, குடிநீர் பாட்டிலில் எடுத்து வந்து, பள்ளப்பட்டி நகராட்சி கமிஷனர் ஆர்த்தியிடம் காண்பித்தனர்.இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு கமிஷனர் உறுதி அளித்தார். பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை