உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மருதுார் குகை வழிப்பாதை விரைந்து முடிக்க கலெக்டரிடம் மனு வழங்கல்

மருதுார் குகை வழிப்பாதை விரைந்து முடிக்க கலெக்டரிடம் மனு வழங்கல்

மருதுார் குகை வழிப்பாதை விரைந்துமுடிக்க கலெக்டரிடம் மனு வழங்கல்குளித்தலை, அக். 9-மருதுார், மேட்டுமருதுார் சாலையில் ரயில்வே குகை வழிப்பாதையை விரைந்து முடிக்ககோரி விவசாயிகள், பொது மக்கள், அனைத்து கட்சி சார்பில் கலெக்டர், சப்-கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.குளித்தலை அடுத்த, மருதுார்-மேட்டுமருதுார் சாலையில் கடந்த ஜூன், 20ல் ரயில்வே குகை வழிப்பாதை அமைக்கப்படுவதாகவும், மூன்று மாதங்களில் பணி முடித்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்தனர். சாலை முழுவதும் துண்டித்து, கடந்த ஜூலை, 17ல் குகை வழிபாதைக்கு பாலம் அமைக்கப்பட்டது. இதுவரை ரயில்வே நிர்வாகம் எந்தவிதமான பணிகளும் செய்யவில்லை.இதனால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சார்பில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை. இதனால் கிராம மக்கள், 10 கி.மீ., சுற்றி வரவேண்டிய நிலையில் உள்ளோம். நேற்று முன்தினம் கலெக்டர், சப் - கலெக்டர், தாசில்தார், டி.எஸ்.பி.,உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் பொது மக்கள், விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சி சார்பில் குகை வழிப்பாதையை விரைந்து முடித்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ