வேலாயுதம்பாளையம் அருகே ஓடிய காரில் திடீர் தீ விபத்து
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்டம், ராயனுார் பகுதியை சேர்ந்தவர் காமராஜ், 45; இவர், தனது மாருதி ஆல்டோ காரை சர்வீஸ் செய்ய, கரூரில் உள்ள தனியார் மெக்கானிக் செட்டில் விட்டிருந்தார். நேற்று சர்வீஸ் பணிகள் முடிந்த நிலையில், காரை மெக்கானிக் தனசேகர், 35, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையம் பகுதியில், மதியம், 12;30 மணியளவில் ஓட்டி கொண்டு சென்றார்.அப்போது, காரின் பின்பக்க பகுதியில் திடீரென வெள்ளை நிற புகையுடன், தீ பிடித்து எரிய தொடங்கியது. இதனால், காரில் இருந்து மெக்கானிக் தனசேகர் உடனடியாக இறங்கி உயிர் தப்பினார். தகவல் அறிந்த, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் சென்று, காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட, மின் கசிவு காரணமாக கார் தீ பிடித்து எரிந்திருக்கலாம் என தெரிகிறது. இதனால், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.