உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூடலுார் வாரச்சந்தையில் அடிப்படை வசதியின்றி அவதி

கூடலுார் வாரச்சந்தையில் அடிப்படை வசதியின்றி அவதி

கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடலுார் மேற்கு பஞ்.,க்குட்பட்ட கூடலுார் வீரமாத்தியம்மன் கோவில் அருகே, வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது.சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சிறு, குறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடைகள் போட்டு மொத்தமாகவும், சில்லரையாகவும் வியாபாரம் செய்து வருகின்றனர். இங்கு, கூடலுார் மேற்கு, தென்னிலை மேற்கு, தெற்கு, கிழக்கு உள்பட பல கிராமங்களில் வந்து செல்கின்றனர்.இந்த சந்தைக்கு கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் போன்ற உள்ளூர் வெளியூர் வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள், வாரச்சந்தைக்கு வருகின்றனர். சந்தையில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆரம்பத்தில் வாரச்சந்தைக்கு வந்த பல்வேறு வெளியூர் வியாபாரிகள், தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்பதால், பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவது இல்லை. இதனால், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விரும்பிய காய்கறிகளை வாங்க முடியவில்லை. உடனடியாக சந்தையில் அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை