உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கி.புரம் பகுதிகளில் சர்க்கரைவள்ளி கிழங்கு அறுவடை

கி.புரம் பகுதிகளில் சர்க்கரைவள்ளி கிழங்கு அறுவடை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சர்க்கரைவள்ளி கிழங்கு அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், வேப்பங்குடி, வேலங்காட்டுப்பட்டி, வலையப்பட்டி, தேசிய மங்களம், மலையாண்டிப்பட்டி, சேங்கல், சின்ன சேங்கல், பஞ்சப்பட்டி, கரட்டுப்பட்டி, லட்சுமணம்பட்டி, வீரிய பாளையம் பகுதிகளில் விவசாயிகள் சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். கிழங்குகளுக்கு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகள் பசுமையாக வளர்ந்து, கிழங்குகள் விளைச்சல் கண்டு வருகிறது.மாசி மாதம் நெருங்குவதால், விளைச்சல் கண்டுள்ள சர்க்கரைவள்ளி கிழங்குகளை, விவசாயிகள் அறுவடை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வளர்ந்த செடிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. பின்னர் உழவு செய்யப்பட்டு, கிழங்குகள் தனியாக தரம் பிரித்து மூட்டைகளாக கட்டப்படுகிறது. சர்க்கரைவள்ளி கிழங்கு கிலோ, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் மணப்பாறை, தோகைமலை, திருச்சி, திண்டுக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் காய்கறிகள் மார்க்கெட்டுகளுக்கு, மரவள்ளிக்கிழங்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை