ரெங்கநாதர் சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவ பெருவிழா
கரூர் அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது.கரூர், அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் இரவு, உற்சவர் திருவீதி உலா நடந்து வருகிறது. மேலும், திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, ஆளும் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று மாலை, ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அதில், கல்யாண வெங்கடரமண சுவாமி, ரெங்கநாதர் சுவாமி உடனான ஸ்ரீ தேவி, பூதேவி அம்பாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்களுக்கு சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.