மாநகராட்சியில் சின்டெக்ஸ் தொட்டி பழுது: சீரமைக்க மக்கள் கோரிக்கை
கரூர்: கரூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்பாடற்ற நிலையில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 48 வார்டு பகுதிகளிலும் பொது-மக்கள் பயன்பாட்டிற்காக போர்வெல் அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். சில பகுதி-களில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி சேதம், மின் மோட்டார் பழுது போன்ற காரணங்களால் செயல்படாமல் உள்ளன. இதனால், தண்ணீர் தட்டுப்பாடால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்-றனர். குடிநீரை காசு கொடுத்தும், பல கி.மீ., துாரம் பயணம் செய்து எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதுபோல பயனற்ற நிலையில் உள்ள டேங்க்குகளை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.