உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட பேரவை கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட பேரவை கூட்டம்

குளித்தலை, :குளித்தலை அடுத்த, காமாட்சிபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக வட்ட பேரவை கூட்டம் நடந்தது.நிர்வாகி வீரமலை தலைமை வகித்தார். தகரம்பட்டி வட்டார செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி, செயலாளர் சக்திவேல் ஆகியோர், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில், சங்கத்திற்கான கடவூர் வட்ட குழுவிற்கு, 11 பேர் கொண்டு குழுவினரை ஒரு மனதாக தேர்வு செய்தனர். போதுமான மழையின்றி, வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால், குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.எனவே, காவிரி நதியில் இருந்து பருவ மழை காலங்களில் வீணாக செல்லும் தண்ணீரை, பம்பிங் முறை திட்டத்தில் குழாய்கள் மூலம் தரகம்பட்டி வட்டாரத்தில் உள்ள பொன்னணியாறு அணை முதல் முள்ளிப்பாடி, மாவத்துார், பி.உடையாப்பட்டி உள்பட வட்டாரத்தில் உள்ள பாசன குளங்களுக்கு தண்ணீரை நிறப்ப வேண்டும் என, தீர்மானங்களை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை