உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 28,041 பயனாளிகளுக்கு பட்டா வழங்க இலக்கு

28,041 பயனாளிகளுக்கு பட்டா வழங்க இலக்கு

கரூர், ''கரூர் மாவட்டத்தில், 28,041 பயனாளிகளுக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரிவித்தார்.கரூர் வெண்ணைமலை அட்லஸ் கலையரங்கில், இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய பின், நிருபர்களிடம் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், 28,041 பயனாளிகளுக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்கு, கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, மின்னாம்பள்ளி, நெரூர் வடக்கு, தெற்கு, அச்சமாபுரம், சோமூர், பஞ்சமாதேவி, ஆத்துார், காதப்பாறை, மண்மங்கலம், கோயம்பள்ளி, குப்புச்சிபாளையம், நன்னியூர் மற்றும் புஞ்சை கடம்பங்குறிச்சி ஆகிய, 19 வருவாய் கிராமங்களை சேர்ந்த, 1,275 தகுதியான நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை குறித்த தேதி, இன்னும் இறுதி செய்யப்படவில்லை.இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில், கரூர் எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, டி.ஆர்.ஓ., கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி