உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தார்ச்சாலை பணி தொய்வு விரைந்து முடிக்க வேண்டும்

தார்ச்சாலை பணி தொய்வு விரைந்து முடிக்க வேண்டும்

தார்ச்சாலை பணி தொய்வுவிரைந்து முடிக்க வேண்டும்குளித்தலை, நவ. 26-தார்ச்சாலை பணி நிறைவு பெறாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் பஞ்., வலையப்பட்டியில் இருந்து நல்லுார், இனுங்கூர் செல்லும் நெடுஞ்சாலை வரை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த சாலையில் ஜல்லி கற்கள் பரப்பிய வகையில், ஒரு மாதத்துக்கு மேலாக இருந்து வருகிறது.இந்த சாலையில் செல்லும் பைக், கார், நடந்து செல்வோருக்கு இடையூறாக இருந்து வருகிறது. பொது மக்கள் பாதிக்காத வகையில், தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை