உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெண்ணை மது பாட்டிலால் தாக்கிய டீ மாஸ்டர் கைது

பெண்ணை மது பாட்டிலால் தாக்கிய டீ மாஸ்டர் கைது

கரூர், தென்னிலை அருகே, இளம் பெண்ணை மது பாட்டிலால் அடித்த, டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், தென்னிலை நத்தமேடு அபிராமி நகரை சேர்ந்தவர் சந்தியா, 29; இவரது கணவர் சந்திரசேகர் இறந்து விட்டார். இதனால் சந்தியா, டீ மாஸ்டர் செந்தில்நாதன், 28; என்பவருடன் பழகி வந்தார். இந்நிலையில் கடந்த, 26ல் சந்தியாவுக்கும், செந்தில் நாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த செந்தில் நாதன், மது பாட்டிலால் சந்தியாவை அடித்துள்ளார். இதுகுறித்து, சந்தியா அளித்த புகார்படி, செந்தில்நாதனை, தென்னிலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ