உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவில் பூட்டை உடைத்து அரை பவுன், வெள்ளி திருட்டு

கோவில் பூட்டை உடைத்து அரை பவுன், வெள்ளி திருட்டு

குளித்தலை:குளித்தலை அடுத்த, கருப்பத்துார் பஞ்., வேங்காம்பட்டியில் மங்களத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வேங்காம்பட்டி, தாளியாம்பட்டி மற்றும் புதுப்பட்டி ஆகிய மூன்று ஊர்களுக்கு பொதுவானது. இந்நிலையில் கடந்த, 3ல், கோவிலின் ஆகம விதிமுறைகளை பின்பற்றி, இரவு பூஜை செய்து பின்னர் நடை அடைத்து சென்றனர். மறுநாள் கோவிலை திறக்க சென்றபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு, மாரியம்மன் மூலவர் சிலையில் இருந்த அரை பவுன் தங்கத் தாலி மற்றும் 3 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இது குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ