உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தற்காலிக பட்டாசு கடை: சப்-கலெக்டர் ஆய்வு

தற்காலிக பட்டாசு கடை: சப்-கலெக்டர் ஆய்வு

குளித்தலை,:பட்டாசு கடைகளை, குளித்தலை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.குளித்தலை தாலுகா பகுதியில், தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடை வேண்டி விண்ணப்பம் செய்த, 25க்கும் மேற்பட்ட கடைகளை சப்-கலெக்டர் சேஷத்ரி மயும் தீபி சானு ஆய்வு செய்தார். அப்போது ஆவணங்கள், கடை அமைய உள்ள இடம், தீ தடுப்பு உபகரணங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். குளித்தலை, நங்கவரம், காவல்காரன்பட்டி, தோகைமலை, அய்யர்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார் மதிவாணன், துணை தாசில்தார்கள் நெப்போலியன், நீதிராஜன், ஆர்.ஐ.,க்கள் முருகன், சுகப்பிரியா, அரவிந்தன் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !