உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டென்னிஸ் அகாடமி துவக்கம்

டென்னிஸ் அகாடமி துவக்கம்

கரூர்:கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், டென்னிஸ் அகாடமியை, துணை முதல்வர் உதயநிதி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.இந்த இடத்தை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது: இங்கு, 3.67 லட்சம் ரூபாய் மதிப்பில் டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியருக்கு டென்னிஸ் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தற்போது தேர்வு குழுவால், 20 மாணவர்கள், 12 மாணவியர் தேர்வு பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தலா, 2,500 ரூபாய்- மதிப்பிலான விளையாட்டு சீருடை மற்றும் காலணிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குணசேகரன், தடகளப் பயிற்சியாளர் சபரிநாதன், கேலோ இந்தியா ஜூடோ பயிற்றுனர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ