மேலும் செய்திகள்
மூட்டு பிரச்னை; வாழ்நாள் பிரச்னை அல்ல!
24-Jan-2025
கரூர்: ஜவுளி தொழில் முனைவோருக்கு, தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், ஜவுளி தொழில் முனைவோர்களுக்கு தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் மூலமாக, கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகத்தில், தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான அக்ரோ டெக்ஸ்டைல்ஸ், ஜியோடெக்ஸ்டைல், மொபைல் டெக்ஸ்டைல்ஸ், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி, நான்கு நாட்களுக்கு அளிக்கப்படவுள்ளது. பயிற்சி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே வழங்குகின்றன. இதற்கு, https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdC7dD60BZ5Ogmktv4Wp3rS8IdsmUu_2FatvcxmdXSdanHWZA/viewformvc=0&c=0&w=1&flr=0&pli=1 என்ற இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குனர் அலுவலகம், துணிநூல் துறை, 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தான்தோன்றிமலை, கரூர்- என்ற முகவரியிலும், gmail.comஎன்ற, இ.மெயில் விலாசத்திலும், 04324- 299 544, 94446 56445 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
24-Jan-2025