லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பாலாலயம்
கரூர் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, கரூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், நேற்று பாலாலயம் நடந்தது.கரூர், திருக்காம்புலியூர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மிகவும் பழமையானது. மூலவர் பெருமாளின் மார்பில், லட்சுமி தாயார் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். கடந்த, 100 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடக்காமல் உள்ளது. இந்நிலையில், தற்போது, ஹிந்துசமய அறநிலைய துறை சார்பில், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திருப்பணிகள் தொடங்க, கோவில் வளாகத்தில் யாக பூ மற்றும் பாலாலயம் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.நிகழ்ச்சியில், கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, கலெக்டர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.