மானாவாரி நிலங்களில் பசுமையாக வளர்ந்துள்ள துவரை
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள துவரை செடிகள், மழை காரணமாக பசுமை-யாக வளர்ந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த லட்சுமணம்பட்டி, வீரியபாளையம், வயலுார், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, மேட்-டுபட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, பஞ்சப்பட்டி, சேங்கல், முனையனுார் ஆகிய இடங்களில், விவசாயிகள் மானாவாரி நிலங்-களில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு துவரை சாகுபடி செய்திருந்தனர்.சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, துவரை செடி-களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது. செடிகள் பசுமையாக வளர்ச்சி அடைந்து வருகிறது.மேலும், அடர்த்தியாக வளர்வதால் செடிகளில் அதிகமான துவ-ரைகள் கிடைக்கும் வகையில் உள்ளது.துவரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்-ளனர்.