உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூருக்கு இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்த பயணிகள் ரயில்

கரூருக்கு இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்த பயணிகள் ரயில்

கரூர்:திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில், இரண்டரை மணி நேரம் தாமதமாக நேற்று கரூர் வந்தது.திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து நாள்தோறும் காலை, 7:00 மணிக்கு ஈரோட்டுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் காலை, 9:00 மணிக்கு கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும். இந்நிலையில், நேற்று காலை மாயனுாரில் ரயில்வே இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ஈரோட்டில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு செல்லப்பட்டு, பயணிகள் ரயிலில் இணைக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் ரயில் இரண்டரை மணி நேரம் தாமதமாக நேற்று காலை, 11:30 மணிக்கு கரூர் வந்தது. பிறகு, ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றது.பொதுவாக, திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலில் கரூருக்கு நாள்தோறும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வருகின்றனர். நேற்று ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், மாயனுாரில் இருந்து பஸ் மூலம் தொழிலாளர்கள், கரூர் வந்து சேர்ந்தனர். மேலும், திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு சென்ற பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி