உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அசுத்தமான நிலையில் தென்கரை வாய்க்கால் படித்துறை படிகள்

அசுத்தமான நிலையில் தென்கரை வாய்க்கால் படித்துறை படிகள்

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, தென்கரை வாய்க்கால் படித்துறை படிகள் அசுத்தமாக இருப்பதால், பெண்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து லாலாப்-பேட்டை பஸ் ஸ்டாப் அருகில் மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து, கட்டளை தென்கரை வாய்க்கால் செல்கிறது. இங்கு பெண்கள் குளிப்பதற்கு படித்துறை கட்டப்பட்டுள்ளது. படித்துறை வழியாக வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது பெண்கள் குளித்து வருகின்றனர்.தற்போது படித்துறை அருகில் செயல்படும், வெற்றிலை தரம் பிரிக்கும் பணிகளில் வீணாகும் வாழை நார் கழிவுகள், வாய்க்கால் படித்துறை படிகளில் கொட்டப்படுகிறது. இதனால் படித்துறை படிகளில் நின்று, பெண்கள் குளிக்க முடியாமலும், துணிகள் துவைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, படித்துறை படிகளில் வாழை கழிவு நார்கள் பயன்படுத்தாமல் இருக்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ