டாஸ்மாக் சுவரை துளையிட்டு திருட்டு
கரூர்:கரூர் - ஈசநத்தம் சாலை, ராயனுார் தில்லை நகரில், டாஸ்மாக் மதுபான கடை செயல்படுகிறது. நேற்று மதியம், 12:00 மணிக்கு மதுபான கடையை ஊழியர்கள் திறக்க சென்றபோது, சுவர் துளையிட்டு இருந்தது. மேலும், கடையில் இருந்த, 12,000 ரூபாய் மதிப்புடைய மதுபான பெட்டி மற்றும் சில்லரை நாணயங்களை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.