உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பூட்டிய வீட்டில் பணம் திருட்டு

பூட்டிய வீட்டில் பணம் திருட்டு

குளித்தலை, குளித்தலை அடுத்த, மணவாசி எஸ்.எஸ். கார்டன் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலாதேவி, 55, பேக் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு 7:00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றவர், மறுநாள் காலை 10:00 மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 50 ஆயிரம் ரூபாய், தலா இரண்டு கிராம் மோதிரம் 2, ஜிமிக்கி 2 கிராம் திருடப்பட்டுள்ளது.அப்பகுதியில் வாசுதேவன், பார்த்தசாரதி ஆகிய இருவர் வீட்டிலும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் வீட்டில் எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை. இதுகுறித்து சகுந்தலா தேவி கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி